ஐ வா தாதிய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

மட்டக்களப்பு பிராந்திய   ஐ வா தாதிய பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வுகள் மட்டக்களப்பில் (23) நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஐ வா தாதியர் பாடசாலை ஒளிவிழா நிகழ்வு பிராந்திய முகாமையாளர் மொகமட் நஜீம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை மேருசன் அடிகளார் கலந்துகொண்டார் .

நிகழ்வில் தாதிய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு  பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய   ஐ வா தாதிய  பாடசாலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் தாதியர் பாடசாலை ஆசிரியர் திருமதி .தர்மபால மற்றும் தாதிய பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்