வீதியில் தேங்கி கிடக்கும் வெள்ளநீரினை அகற்றும் நடவடிக்கை

(லியோன்)

வீதியில் தேங்கி கிடக்கும் வெள்ளநீரினை அகற்றும் நடவடிக்கையினை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது


மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு பூம்புகார் பகுதி வீதியில் தேங்கி கிடக்கும் வெள்ளநீரினை அகற்றுவதற்காக அப்பகுதி மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க குறித்த வீதி பகுதியில் தேங்கி கிடக்கும் நீரினை  அகற்றுவதற்கான  நடவடிக்கையினை மாநகர சபையினால்  முன்னெடுக்கப்பட்டன.


குறித்த வீதி பகுதிகளை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் . .மணிவண்ணன், அரசாங்க அதிபர் எம் உதயகுமார் மற்றும் மாநகர சபை பொறியிலாளர் ஆகியோர் பார்வையிட்டதன் பின்  தேங்கி நிற்கும்  வெள்ளநீரினை வாவிக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  .