மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் வருடாந்த ஒன்றுகூடல்

(லியோன்)

 இலங்கையின் முதல் பாடசாலையென்ற பெருமையினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் (16) மாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான எம் .உதயகுமார்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக  கல்லூரி முன்னாள்  அதிபர்  கே .ஜி . அருளானந்தம் ,கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான ரி.விமல்ராஜ் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர், பழைய மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பாடசாலையின் வெளிநாட்டு கிளையில் இருந்தும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.



பாடசாலையின் 203 வது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் குழுக்கள் முறையிலான பரிசிகள் வழங்கப்பட்டதுடன் பழைய மாணவ வாழ்நாள் அங்கத்துவ அட்டைகள்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .