லயன்ஸ் கழக சிறார்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பிராந்திய தலைவர்  ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற லயன்ஸ் கழக உறுப்பினர்களின் சிறார்களின்  வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு தந்தை சி வி .அன்னதாஸ்  கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கழக சிரேஷ்ட லயன் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில்  சிறார்களின் வினோத கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான பரிசில்களும்  அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் லயன் உறுப்பினர்களின் சிறார்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்