மறை மாவட்ட கரோல் போட்டியில் மரியாள் பேராலயம் முதல் இடம்

(லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்ட அளவிலான  மறை கோட்ட ஆலய பங்குகளின் நத்தார் கரோல் கீத போட்டிகள் சொமாஸ்கன் சபையின் ஏற்பாட்டில் சொமாஸ்கன் அருட்தந்தையர்கள் வி . இருதயராஜ் , ஜி . மகிமைதாஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில்  மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகை தலைமையில் தன்னாமுனை மியானி நகரில் நடைபெற்றது


நடைபெற்ற மறைமாவட்ட நத்தார் கரோல் கீதம் போட்டிகளில் 10  பாடல் குழுக்கள் கலந்துகொண்டன ,கலந்துகொண்ட பாடல் குழுக்களுக்கிடையில்  குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன  நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற குழுக்களையும் ,சிறந்த பாடல் குழுக்களாக இரண்டு குழுக்களையும் தெரிவு  செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன .
 இதில் முதல் இடத்தினில் மட்டக்களப்பு மரியாள் பேராலய பாடல் குழுவும் ,இரண்டாம் இடத்தினை நாவக்குடா பங்கு ஆலய  பாடல் குழுவும், மூன்றாம் இடத்தினை கல்லடி டச்பார் ஆலய பாடல் குழுவும் பெற்றுக்கொண்டன .

சிறந்த பாடல் குழுக்களாக மட்டக்களப்பு செங்கலடி புனித நிக்லஸ் ஆலய பங்கில் இருந்து கலந்து கொண்ட இரண்டு பாடல் குழுக்கள் நான்காம் ,ஐந்தாம் இடங்களை பெற்றுக்கொண்டன .
மறைமாவட்ட ரீதியாக கரோல் கீத போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடல் குழுக்களுக்கு மறைமாவட்ட ஆயரினால் பணப்பரிசுகளும் ,வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன .

இந்த போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக  எஸ் . நிகலஸ் கிசோக், கே. இருதயநேசன் , திருமதி . எஸ் .தர்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்


இந்கழ்வில் மறை மாவட்டத்தின் மறை கோட்ட ஆலய பங்குகளின் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பங்கு பாடல் குழுவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .