மண்ணரிப்பு பாதுகாப்பு சம்பந்தமான பண்பாட்டுக் கொள்கை செயல் திட்டம்

(லியோன்)

காணிப் பண்பாட்டுக் கொள்கை செயல் திட்டம் தொடர்பான மீளாய்வு மற்றும் மண்ணரிப்பு பாதுகாப்பு சம்பந்தமான பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
 

1951 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க மண்பாதுகாப்பு சட்டம் எனப்படும்  சட்டத்திற்கு அமைய  1996 ஆம் ஆண்டில் 24 ஆம் இலக்க மண் பாதுகாப்பு (திருத்தத்) சட்டத்தின் மூலம்  சட்டமாக்கப்பட்டு  விவசாயத்துறைக்கு நிலத்தைப் பயன்படுத்தும் போது மண் கழுவிச் செல்லப்படுவதைக் குறைப்பதற்கு  மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில்  பயிற்சி பட்டறைகளும் ,செயல் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன .

இதன் கீழ் மண்ணின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரித்து அவற்றை பேணுதல் , மோசமான நிலையிலுள்ள அல்லது பாதிக்கப்பட்டக் காணிகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருதல் , மண் கழுவிச் செல்லப்படுவதைத் தடுத்தலும் , அதைக் குறைப்பதற்காக மட்காப்பு செய்தல் , வெள்ளப் பெருக்கு , உவர்த்தன்மையாதல் , காரத்தன்மை , நீர் சேர்தல், வரட்சி போன்ற காரணிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காணிகளை பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பாக மண் பாதுகாப்பு (திருத்தத்) சட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன

இதற்கு அமைவாக காணிப் பயன்பாட்டுத் திணைக்களத்தினால் 2017 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் , 124 பாடசாலைகளிலும் மண்ணரிப்பு பாதுகாப்பு சம்பந்தமாக பயிற்சி பட்டறைகளும் ,அபிவிருத்தி செயல் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன .

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காணிப் பயன்பாட்டுத் கொள்கை செயல் திட்டம் மற்றும் மண்ணரிப்பு பாதுகாப்பு சம்பந்தமான வேலைத்திட்டங்கள் தொடர்பாக  மீளாய்வு செய்யும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு காணி பயன்பாட்டுத்  திணைக்கள உதவி பணிப்பாளர் எம் எ .நஜீப் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று  நடைபெற்றது .  \


நடைபெற்ற மீளாய்வு செய்யும் பயிற்சி பட்டறையில் காணி பயன்பாட்டுத்  திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ( பயிராக்கவியல் ) எம் .கிருபா மூர்த்தி மற்றும் மாவட்ட காணி பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் , காணி பயன்பாட்டுத் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்