அரச சார்பற்ற நிறுவனங்கள்,சிவில் அமைப்புக்களுடன் புதிய அரச அதிபர் சந்திப்பு

(லியோன்)

புதிய மாவட்ட அரசாங்க அதிபருடனான அறிமுக கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது


மாவட்ட அரச சார்பற்ற  நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில்  அறிமுக கலந்துரையாடலும் , மாவட்டத்திற்கான எதிர்கால அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் (30) நடைபெற்றது 

இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  அரசினாலும் ,அரச அதிகாரிகளினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது , இவ்வாறன நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 60 மேற்பட்ட பதிவு செய்யப்பட அசர சார்பற்ற நிறுவனங்கள் இருக்கின்றன , இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படும் போது மாவட்டத்தில் சிறந்த  அபிவிருத்தியினையும் அதேபோன்று அனர்த்தங்களின் போது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார் .


நடைபெற்ற அறிமுக கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ,  நெடுஞ்செழியன் , அனர்த்த முகாமைத்துவ திணைக்கள  உதவி பணிப்பாளர் எம் சி எம்  ரியாஸ் , அரச சார்பற்ற  நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தின் தலைவர் சொலமன் பெசில் சில்வஸ்டர்  மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .