மாநகர எல்லைக்குள் தரம் பிரித்து கழிவுச் சேகரிப்பு

(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்கு முறைகள் தொடர்பான கலந்துரையாடல்  (01) மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டு உக்கக் கூடிய கழிவுகள் உக்க முடியாத கழிவுகள் என முறையாக தரம் பிரித்து  கழிவுச் சேகரிப்பு முறையினை  நடைமுடைப்படுத்தப்பட்டு வருகின்றன

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை ,கிழக்கு  பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் ,,பிரதேச செயலகம் மற்றும் லியோ கழகம் ஆகியன இணைந்து  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்கு முறைகள் தொடர்பான கலந்துரையாடலும்  தொடர்ந்து  வீடுகளுக்கு சென்று கழிவுகள் சேகரிப்பு சேவைகள் மற்றும் கழிவுகள் தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் தலைமயில்   நடைபெற்றது ,

இதன் ஆரம்ப கட்ட நடைமுறைப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு கிராம சேவை பிரிவில் முன்னெடுக்கப்பட்டன .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் . பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , கிழக்கு  பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வைத்தியர் கே .அருளானந்தம் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் .மதனழகன் ,மட்டக்களப்பு  வர்த்தக சங்க தலைவர் செல்வராஜா ,  306  C  மாவட்ட ஆளுநரின் பிரதான இணைப்பாளர் லயன் எ .செல்வேந்திரன் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் மாணவர்கள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , லியோ கழக உறுப்பினர்கள் , மாநகர சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்