பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள் - தெளிவுபடுத்தவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு

மட்டகளப்பில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் இது உண்மையில் பாம்பா? அல்லது ஒரு வகை மீன் இனமா? என பல பிரச்சனைகள் எழுந்தவண்ணமே உள்ளது.

உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி எனப்படும். பாம்பு இனம் என்பதே இதன் பெயராக உள்ளது. இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர்.

ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளதையும் மறுக்க முடியாது.

உண்மையில் இந்த வகை பாம்பினமனது சூனாமிக்கு முன்பும் பல தடவைகள் மழை அதிகரிப்பதனால்  ஆற்றில் இருந்து ஆற்று வாய் ஊடக கடலில் செல்வது  வழமையாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் அவதானித்துள்ளனர். அதன் பின் சுனாமி வந்ததாக மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

உண்மையில் அது அல்ல எமது கிழக்கு மாகணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப் பட்டு இருந்ததனால் இந்த பாம்பினை மக்கள் கண்களால் காண முடியாத சூழ்நிலைகள் இருந்தது.

யுத்தம் முடிவடைந்ததும் காவல் அரண்கள் அகற்ற பட்ட போது இந்த பாலத்தின் ஊடக மக்கள் பயமின்றி எந்த நேரமும் பிரயாணம் செய்யும் போதும் காத்து வாங்குவதற்கு அவ்விடத்தில் நிற்கும் போதும்  பாம்புகள் செல்வதை மக்கள் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பாம்பு இனமானது பல ஆண்டுகளுக்கு முன்  ஆற்று வாயில் வலை வீசிய மீனவர்களின் வலைகளை கூட இழுத்து சென்ற சம்பவங்களும் கடந்த பல ஆண்டுகளுக்கு முதல் நிகழ்ந்துள்ளதாக வயது முதிர்ந்த மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த பாம்பினமானது கடலில் அதிக காலம் வாழாது எனவும் உப்பு தன்மை அதிகரிக்கும் போது இவைகள் இறந்து கரையொதுங்கும்  சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.இருந்தாலும் இது போன்ற அதிகளவிலான பாம்பினகள் கடலில் குறிப்பாக கரை வலையில் பிடிபட்ட சம்பவம் இதுவே முதல் தடவை என தெரிவிக்கும் மீனவர்கள் இதற்க்கான காரணம் என்ன வென்று மக்களை தெளிவு படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும் குறிப்பிடுகின்றனர்.

கோரத் தாண்டவம் ஆடிய சுனாமியின் வடுக்களை சுமந்து இன்றும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் சாதாரண வறுமை கோட்டிற்கு கிழ வாழும் மக்கள் பயப்படுவது யதார்த்தமான உண்மையே!

எது எவ்வாறாக இருந்தாலும் சுனாமியின் பின் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் அடைவதா? அல்லது வழமை போல இது இடம்பெறுகின்றதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது இயற்க்கை சீற்றம் என்பது திடீர் என வருபவை எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சால சிறந்தது.