மனித உரிமை தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது

 (லியோன்)சர்வதேச மனித உரிமைத் தினத்தை முன்னிட்டு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  மனித உரிமை தின நிகழ்வுகள்   மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  பிராந்திய  இணைப்பாளர்   .சி .  . அசிஸ்  தலைமையில்   நடைபெற்றது
.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக   மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் சிறப்பு அதிதியாக   கலந்துகொண்டார் .


இந்நிகழ்வுக்கு விசேட கருத்துரைகளை வழங்க வளவாளர்களாக  வின்ஸ் ஒப் விமன் பெண்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி பாவுமியா சரீப் , கேமிட் நிறுவன பிரதிநிதி  கலைச்செல்வன் மற்றும் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணிகள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,அரச திணைகள் உத்தியோகாத்தர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்