கொக்கு தீவு இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது

(லியோன்)

மட்டக்களப்பில் கொக்கு தீவு என அழைக்கப்படும்  பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம் , பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்கு தீவு என அழைக்கப்பட்டும் பறவைகள் சரணாலயம் இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இன்று காலை 08.00 மணியளவில் தீவுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் உடன் லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கழக உறுப்பினர்களினால் சம்பவம் தொடர்பில் பாலமீன்மடு பொலிஸ் காவலரண் பொலிசாருக்கும், கரையோர பேணல் திணைக்களத்திற்கும் , மாநகர சபை தீ அணைப்பு பிரிவு , கிராம அபிவிருத்தி சங்கம் , கிராமிய மீனவ சங்கம் , கிராம சேவை உத்தியோகத்தர் , ஆகியோருக்கு தெரியபடுத்த பட்டதை தொடர்ந்து   .

சம்பவம்  இடம்பெற்ற  தீவு பகுதிக்கு  சென்றவர்கள்  தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
குறித்த பறவைகள் சரணாலயத்திற்கு அதிகளவிலான அறிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து  செல்வதாகவும் , குறிப்பாக நவம்பர் ,டிசம்பர் காலப்பகுதியில் அதிகளவிலான பறவைகள் வந்து முட்டையிட்டு தனது இனப்பெருக்கம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர் .
இன்று இடம்பெற்றுள்ள தீவிபத்தினால்  இனப்பெருகத்திற்காக பறவைகள் இட்ட முட்டைகளும் ,அதன் குஞ்சுகளும்  தீயில் கருகி நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .


குறித்த தீவில் வைக்கப்பட்ட தீ தொடர்பான விசாரணைகள்  கரையோர பேணல் திணைக்களமும் , மட்டக்களப்பு பொலிசாரும் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்