மட்டக்களப்பு மாவட்டத்தில் 15061 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .


(லியோன்)
201
7 ஆண்டுக்கான  கல்வி பொது சாதாரண தர பரீட்சைகள் இன்று  நாடளாவிய ரீதியில்  ஆரம்பமானது


இம்முறை  புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாக பரீட்சைகள் நடைபெறுகின்றன   .

 இதன் கீழ்   மட்டக்களப்பு மாவட்டத்தில்   05  வலயத்திலும் புதிய பாடத்திட்டத்திற்கான  102  பரீட்சை நிலையங்களும் பழைய பாடத்திட்டத்திற்கான  55   பரீட்சை நிலையங்களும் மொத்தமாக  157   பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

இதில்  புதிய பாடத்திட்டத்திற்கான  பாடசாலை பரீட்சாத்திகள்   10273   பேரும்   பிரத்தியோக பரீட்சாத்திகள் 4788  பேரும்  மொத்தமாக  புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 15061  பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .


பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் இன்று காலை ஆலய  வழிபாடுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது