நாவாக்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(லியோன்)

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும்  டெங்கு ஒழிப்பு செயல் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு நாவக்குடா சுத்தானந்தா சன சமூக நிலையம் ,சுத்தானந்தா விளையாட்டு கழகம்  இணைந்து  “ கிராமத்தை சுத்தமாக பாதுகாப்போம் , கழிவுப் பொருட்களை போடாதீர்கள் “எனும் தொனிப்பொருளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை நாவாக்குடா கிராம பகுதியில் இன்று முன்னெடுத்தனர் .


மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் தலைமையில் ஆரம்பமான இந்த சிரமதான பணியில் மாநகர சபை ஊழியர்கள் , சுத்தானந்தா சன சமூக நிலையம் ,சுத்தானந்தா விளையாட்டு கழகம்    அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்