சிற்பதேருக்கான சில்லு பொருத்தும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கான  சில்லு பொருத்தும் நிகழ்வு (15) நடைபெற்றது .


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி  ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற 39.3 அடி உயரமான சிற்பதேருக்கான  சில்லு பொருத்தும் நிகழ்வு இன்று காலை சுபவேளையில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன்  நடைபெற்றது


ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  சௌந்தராஜன்  குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.