ஹோப் யுனி வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வு



லெட்டர்  ஒப் ஹோப் அமைப்பின்  ஹோப்  யுனி  வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது  .


சிறுவர்களை மையப்படுத்திய குடும்ப அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும்  லெட்டர்  ஒப் ஹோப் அமைப்பின் அனுசரணையில் ஹோப்  யுனி  வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு  (15)  மட்டக்களப்பு வை எம் சி எ மண்டபத்தில் நடைபெற்றது .

லெட்டர்  ஒப் ஹோப் அமைப்பின்  பொதுமுகாமையாளர் திருமதி .எம் .ரஞ்சினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , சிறப்பு விருந்தினர்களாக லெட்டர்  ஒப் ஹோப் அமைப்பின்  நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எஸ் . அருமைநாயகம் ,சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி கே .சசிகரன் ,ஆகியோர் கலந்துகொண்டனர் .

லெட்டர்  ஒப் ஹோப்  அமைப்பானது  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் மண்முனை வடக்கு . மண்முனை மேற்கு , மண்முனை பற்று ,ஏறாவூர் , செங்கலடி ,வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலக  பிரிவுகளில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் , மாணவர்களின் கல்வி அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது .

திட்டத்தின் ஊடாக பயன்பெறும் பயனாளிகள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்த நிகழ்வாக வருடந்தோறும் நடத்தப்படும் ஹோப்  யுனி  வாழ்நாள் விருது வழங்கும் நிகழ்வும் மற்றும் ஒளிவிழா நிகழ்வு  நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் , பயனாளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில்  சாதனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  . இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் , லெட்டரப் ஒப் ஹோப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்