மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல சபைகளையும் கைப்பற்றுவோம் -அமைச்சர் ஹிஸ்புல்லா நம்பிக்கை

சிறுபான்மை சமூகம் இன்றைய ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளுராட்சிசபைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்ப்pல் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார்.

ஆதரவாளர்களுடன் வருகைதந்த இராஜாங்க அமைச்சர் வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நாங்கள் இன்று தாக்கல் செய்துள்ளோம்.எதிர்வரும் ஏறாவூர் நகரசபை தேர்தலில் அதிகளவு ஆசனங்களைப்பெறுவதன் ஊடாக அப்பகுதிக்கு சிறந்த எதிர்காலத்தினை ஏற்படுத்தமுயுடிம்.

ஜனாதிபதியின் நல்லாட்சியின் ஆட்சியின் காலத்தில் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்த்தப்பட இருக்கின்ற சூழ்நிலையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்கள் முழுமையான அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என பல வேலைத்திட்டங்களை நாங்கள் முன்மொழிந்திருக்கின்றோம்.இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் கட்சியில் உள்ள உறுப்பினர்களை தெரிவுசெய்வதன் மூலமே இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியும்.

இந்த தேர்தல் நகரங்களை கட்டியெழுப்புகின்ற கிராமங்களை அபிவிருத்திசெய்கின்ற தேர்தல்.கொள்கைளுக்காக வேறுவேறு போராட்டங்களுக்கு வாக்களிக்கும் தேர்தல் அல்ல.பாராளுமன்ற,மாகாணசபை தேர்தல்கள் வரும்போது அவ்வாறான தீர்மானமொன்றை எடுக்கமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சகல இனமக்களும் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு எமது பகுதிகளில் உள்ள பிரதேச அபிவிருத்திகளை ஒன்றிணைப்பது போன்ற அடிப்படை விடயங்களை நிறைவுசெய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே பெற்று;ககொள்ளமுடியும். அந்த அடிப்படையில் ஏறாவூர் நகரசபைக்கு நியமனங்களை தாக்கல்செய்துள்ளோம்.

சிறுபான்மை சமூகம் இன்றைய ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 சபைகளையும் கைப்பற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.