டான் டிவி இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

டான் டிவி நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாமாங்கத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தில் டான் டிவி நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (15)  வியாழக்கிழமை காலை சுபவேளையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் எஸ் .செல்வராஜா கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி  வைத்தார் .


அடிக்கல் நாட்டும் நிகழ்வில் டான் டிவி நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை நிறுவன ஊழியர்கள்  கலந்துகொண்டனர்