கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்.வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 155 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொழிலுரிமைக்கான போராட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப் படாமையைக் கண்டித்தும் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளது நியமனத்தை விரைவுபடுத்தக் கோரியும் நாளை(06.12.2017) மட்டக்களப்பு நகரில் காலை 10.00 மணியளவில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளது.

எனவே அனைத்து பட்டதாரிகளும் தவறாமல் இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைவதுடன் தமக்கான ஆதரவு கருதி தங்களது பெற்றோர்,நண்பர்கள் என அழைத்து வரும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றனர்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்.