(லியோன்)
மாவட்ட சிறுவர் சபை மற்றும் பிரதேச செயலக சிறுவர் சபை மாணவ சிறார்களுக்கான
தலைமைத்துவ தொடர்பான பயிற்சி பட்டறை (15) மட்டக்களப்பில்
நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி
. குகதாசன் ஒழுங்கமைப்பில் மாவட்ட சிறுவர் சபை மற்றும் 14  பிரதேச செயலக பிரிவுகளின் சிறுவர் சபை மாணவ சிறார்களின்  ஒற்றுமைக்கான 
தலைமைத்துவம் ,அணியாக செயற்பட வேண்டிய விடயங்கள் உள்ளடக்கியதாக மாணவ
சிறார்களுக்கான  பயிற்சி பட்டறை மாவட்ட
செயலகத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற பயிற்சி பட்டறையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு,  சிறுவர்களது பிரச்சினை , மற்றும்
அபிவிருத்திசார் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது . 
இந்த பயிற்சி பட்டறையில் வளவாளராக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு  திணைக்கள பணிப்பாளர் தாசன் கலந்துகொண்டார் 
பயிற்சி பட்டறையில் 14  பிரதேச
செயலக  பிரிவுகளின் சிறுவர் சபை மாணவ
சிறார்கள் , பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்