குருத்துவ திருநிலைப்படுத்தல் விசேட திருப்பலி திருச்சடங்கு

(லியோன்)

 மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்  மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில்  குருத்துவ  திருநிலைப்படுத்தல்  விசேட திருப்பலி  திருச்சடங்கு   ஆயர் தலைமையில் (16)நடைபெற்றது


மூதூர் பங்கை சேர்ந்த  அன்ரனி ஜென்சன் லொயிட் ஆகிய  அருட்சகோதரரை  அருட்தந்தையாக  குருத்துவ  திருநிலைப்படுத்தும்  விசேட திருப்பலி திருச்சடங்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்  இன்று  மட்டக்களப்பு  மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

இவர் 2004  ஆண்டு தனது  தேவ அழைத்தலை உணர்ந்து சிறிய குருமடத்தில் இணைந்து கொண்டார் .

இங்கு கல்வியை முடித்துக்கொண்டு களுத்துறை பெரிய குருமடத்திற்கு கல்வியை தொடர்ந்தார். அதன்பின் மெய்யியலை புனித பிரான்சிஸ் சவேரியார் பெரிய குருமடம் யாழ்பாணத்திலும் ,இறையியலை கண்டி தேசிய குருமடத்திலும் , இடைக்கால பயிற்சிகளை மட்டக்களப்பு சிறிய குருமடத்திலும் ,அளிகம்பையிலும் நிறைவு செய்தார் . 19.08.2017  தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தியாக்கோனாகத் திருநிலைப்படுத்தப்பட்டு இன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்

இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ,   அருட்தந்தையர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட   அருட்தந்தையின்  பெற்றோர்கள் குடும்ப உறுப்பினர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் .