பெரியகல்லாறில் இளைஞன் படுகொலையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

(புருசோத்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலைசெய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை மாலை பெரியகல்லாறில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை  (26-12-2017)மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஷபெரியகல்லாறு ஊர்வீதியில் உள்ள புனித  தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்து கத்திக்குத்துவரை சென்றதுடன் இது தொடர்பில் தந்தையும் மகனும் கைதுசெய்யப்பட்டு ஜனவரி 11ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன் திமேசன்(23வயது)என்னும் இளைஞர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொலையினைக்கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதிகபட்சதண்டனை வழங்குமாறு கோரியும் உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள்,உறவினர்கள்,கிராம மக்கள் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடாத்தினர்.

குறித்த இளைஞன் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முறையில் வசிhரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அமைதியான முறையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து சடலம் கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.