விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளன விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரணையில் மாவட்ட பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளன தலைவர் எஸ் . திவ்யநாதன் தலைமையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்  தவிசாளர் இ .சாணக்கியன் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்


நிகழ்வில் மட்டக்களப்பு  தேசிய இளைஞர் சேவைகள்  மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன், தேசிய இளைஞர் சேவைகள்  மாவட்ட உத்தியோகத்தர் திருமதி .கலாராணி யேசுதாசன் , நிஸ்கோ முகாமையாளர் பி .கிருபை ராஜா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனம் மற்றும் மாவட்ட பிரதேச செயலக கழக  இளைஞர் யுவதிகள்  கலந்துகொண்டனர்