கருணா அம்மான் |வேட்பு மனுத்தாக்கல் செய்தார்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக சுயேட்சையாக இன்று புதன்கிழமை மாலை வேட்புமனுவை தாக்கல் செய்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மற்றும் மண்முனைப்பற்றுக்கான வேட்பு மனு இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் ஏனைய சபைகளுக்கு வேட்பு மனுத்தால்செய்யவுள்ளதாகவும் இம்முறை கனிசமான ஆசனங்களை தமது கட்சி பெற்றுக்கொள்ளும் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.