மட்டக்களப்பில் மக்கள் விடுதலை முன்னணி வேட்புமனுத்தாக்கல்

மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல்செய்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் சுனில்கெந்து நெத்தி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை வேட்புமனுவை தாக்கல்செய்தனர்.

கோறளைப்பற்று மற்றும் மண்முனைப்பற்றில் போட்டியிடுவதற்காக இந்த வேட்புமனு தாக்கதல் செய்யப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி இனமத பேதங்களுக்கு அப்பால் இந்த நாட்டில் செயற்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாகவும் சுனில்கெந்து நெத்தி தெரிவித்தார்.