சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  மண்முனை  வடக்கு  பிரதேச  செயலக  சமூக  சேவைகள்    பிரிவினால்  நடத்தப்பட்ட  மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு  இன்று  மண்முனை வடக்கு  பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மண்முனை  வடக்கு பிரதேச  செயலக  சமூக  சேவைகள்  பிரிவினால்                 நடத்தப்பட்ட  மாற்றுத்திறனாளிகள்  தின  நிகழ்வும்   “ தடைகளே   படிகளாக ‘   எனும்  மலர்  வெளியீட்டு நிகழ்வும்  மாற்றுத்திறனாளிகளின் கைவினைப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

பிரதேச செயலாளர்  கே குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு  செயலக  உதவி பிரதேச  செயலாளர்  எஸ் . யோகராஜா , உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் .சதிஸ் குமார் மட்டக்களப்பு  மாவட்ட  சமூக சேவை  உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி    ஆகியோர் கலந்துகொண்டனர்

நிகழ்வில்  தரிசனம்வாழ்வோசை,ஓசாணம்மென்கப்புகலிடம் ஆகிய   நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும்  ,பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்  


சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில்  மாற்றுத்திறனாளிகளின்   நிகழ்வுகளும் ,விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .