40வருடமாக ஏமாற்றப்பட்ட மக்கள் -இனியாவது கண்திறந்து பார்ப்பார்களா?

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி கடந்த 40வருடகாலமாக அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பகுதியான வறிய மக்கள் அதிகளவு மக்கள் வாழும் நிலையில் மிகமோசமான நிலையினை தமது பகுதி மக்கள் மழை காலங்களில் எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு தமது பிரதேச நிலைமையினை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்கு மக்களின் நீண்டகால போராட்டத்தினை காணமுடிந்தது.

நாவற்குடா கிழக்கு பகுதியின் வீதிகள் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கும் பகுதியாக உள்ளதுடன் வீடுகளுக்குள் நீர் புகும் நிலையிருந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நீர் வழிந்தோடும் பகுதி நீண்டகாலமாக முறையாக புனரமைக்கப்படாத நிலையினால் வெள்ள நீர் வடிந்தோடமுடியாத நிலையில் நீண்ட காலத்திற்கு வீதிகளிலும் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தேங்கி நிற்பதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் குறித்த குடும்பங்கள் மழை காலங்களில் இடம்பெயர்ந்து பொது கட்;டிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசிக்கும் நிலையேற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பல்வேறு நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாவதுடன் வீடுகளில் நீர்த்தேங்கி நிற்பதனால் தமது குழந்தைகளுக்கும் அது ஆபத்தாக சிலவேளைகளில் அமைவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் யாரும் வீட்டில் உயிரிழந்தால் அவர்களை நல்லடக்கம் செய்யமுடியாத நிலை கூட ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கும் அவர்கள் மழை காலங்களில் வீதிகளில் நீர் நிரம்புவதன் காரணமாக நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லமுடியாத நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வீதிகளில் நிரம்பியுள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளபோதிலும் அதன் ஊடாகவே தினமும் தமது பிள்ளைகள் பாடசாலைகளுக்கும் வேறு
ஷதேவைகளுக்கும் சென்றுவருவதாகவும் இதன் காரணமாக தமது பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அஞ்சுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நீர் வழிந்தோடும் பகுதியை இனங்கண்டு அதன் ஊடாக நிரந்தர வடிகான்கள் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தும் பிரதேச மக்கள் மழை காலங்களில் மாநகரசபையினால் தற்காலிகமாக நீரை அகற்றுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பயணளிப்பதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் தெரிவித்தபோதிலும் இதுவரையில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்கள் வாக்குச்சேகரிக்கவரும் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றபோதிலும் வெற்றிபெற்றதன் பின்னர் தம்மை திரும்பிபார்ப்பதில்லையெனவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீர் நிரம்பியுள்ள வீதிகளை பயன்படுத்தியும் நீர்நிரம்பியுள்ள வீடுகளிலும் வசித்துவரும் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உhயி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் சார்ப்pல் கோரிக்கை விடுக்கின்றோம்.
\