மட்டக்களப்பில் 13வது ஆண்டு ஆழிப்பேரலை நினைவுதினம் உணர்வுபு_வமாக அனுஸ்டிப்பு

ஆழிப்பேரலையின் அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த உறவுகளின் 13வது ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரழையினால் ஆயிரக்கணக்கானோர் பலியானதுடன் கோடிக்கான சொத்துகளும் அழிவடைந்தன.

இதனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உயிர்களை பலிகொண்ட கல்லடி,திருச்செந்தூர் பகுதியில் உயிர் நீர்த்தவர்களுக்கான நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை உணர்வு”ர்வமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோரினால் நடாத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

திருச்செந்தூர் பகுதியில் ஆழிப்பேரலை காரணமாக சுமார் 245க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.இவர்களின் உறவினர்கள் மலரஞ்சலி,மற்றும் ஈகச்சுடர் ஏற்றி நினைவஞ்சலிசெய்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் பகுதியில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட 210பேரின் நினைவு தினம் புதுமுகத்துவாரம் சுனாமி நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர் நீர்த்தவர்களுக்கான விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு உயிர் நீர்த்தவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

இதேபோன்று கல்லடி,புதிய டச்பாரில் உள்ள சுனாமி நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றது.இதன்போது அருட்தந்தையர்கள்,உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இங்கு 150க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையினால் அள்ளுண்டு போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.