கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றுசேருமாறு பிரசாந்தன் அழைப்பு


கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறான கூட்டணிக்கு தமது கட்சி என்றும் தயாராகவிருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு கொழும்பில் அத்துருகிரியவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 09வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை நினைவுகூரப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச்செயலாளர் ”.பிரசாந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணசபை தேர்தலில் பிள்ளையானை தோற்கடிக்க நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 11ஆசனங்களுடன் 07ஆசனங்களைக்கொண்ட சமூகத்திடம் ஆட்சியை கொடுத்து கிழக்கு மாகாணத்தினை அடகுவைத்துவிட்டது.
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கும் வகையிலான முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளது.அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படும்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எந்த வகையிலாவது அதற்கான ஆதரவினை வழங்கதயாராகவுள்ளது.
இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை பாரிய இனரீதியான பிரச்சினையாக தெற்கில் காட்டப்படுவதுடன் வடக்கில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அதனை வேறு ஒரு சாயம்”சியும் புதிய அரசியல்யாப்பிற்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.நல்ல தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றபோது எமது கட்சி ஆதரவு வழங்கும்.
2018ஆம் ஆண்டு கிழக்கில் இரண்டு பாரிய தேர்தல்களை எதிர்கொள்ளும் நிலையுள்ளது.இந்த தேர்தலில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எவ்வாறு தமது இருப்புகளை நிலைநிறுத்திக்கொள்ளப்போகின்றார்கள் என்பதே இன்று கேள்விக்குறியாகவுள்ளது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள் காரணமாக பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன.வடக்கில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான அணியினர் புதிய கூட்டினை உருவாக்கி தனியாக போட்டியிடப்போகின்றோம் என்று சொல்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து எந்த கட்சியும் வெளியேறப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறான முன்னெடுப்புகளை முன்னெடுக்கவேண்டும்,அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை இங்குள்ள புத்திஜீவிகள் வெளிப்படுத்தவேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பொறுத்தவரையில் படகு சின்னத்தில் தனித்து போட்டியிடவேண்டும் என்பதை புத்திஜீவிகளும் கட்சி ஆதரவாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக,வேலைவாய்ப்பு,நில ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இதற்கு முகம்கொடுக்கின்ற அரசியல் தலைமைகள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என்பது எமது கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துவமாக போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் கிழக்கு மாகாண மக்களை நேசிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் சமூக அமைப்புகளும் ஒன்றாகவரும்வேளையில் நாங்கள் அனைவரும் ஓரு குடையின் கீழ் நின்று போட்டியிடவும் தயாராகவுள்ளோம் என்பதை இங்கு பகிரங்க வேண்டுகோளாக எமது கட்சி விடுக்கின்றது.
கிழக்கு மாகாணத்தின் நிலைமை மிகவும் புதாகரமாக சென்றுகொண்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் சென்றுகொண்டுள்ளது.அண்மையில் புள்ளவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 346 கிராம சேவையாளர் பிரிவு மட்டக்களப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.மாவட்ட திட்டமிடல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் 345 கிராம சேவையாளர் பிரிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு கிராம சேவையாளர் பிரிவு எங்கு உள்ளது.அதனை யார் ஏற்படுத்தினார்கள்.
அதேபோன்று புள்ளவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 10வருடத்தில் அதிகரித்த சனத்தொகையினை விட சடுதியான வகையில் மூன்று மடங்கு சனத்தொகை அதிகரித்துள்ளது.இந்த சடுதியான சனத்தொகை அதிகரிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?இது தொடர்பில் தகவலி; அறியும் சட்டத்தின் மூலம் மாவட்;ட அரசாங்கத்திடம் விபரங்கள் கோரியுள்ளோம்.
இது தொடர்பில் இணக்க அரசியல் பேசும் மாவட்ட அபிவிருத்திக்குழுவில் குந்திக்கொண்டிருக்கும் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எதனைப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடாத்தும்போது அங்கு சென்று அரசியல் செய்யும் செய்துகொண்டு அரசாங்க அதிபரிடம் மட்டுமே கோர்pக்கையினை முன்வைப்பார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள். இதற்காகவா தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக ஒரு அரசாங்க அதிபரை நியமிக்கமுடியாதளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.அதிலும்கூட அரசியல் செய்யும் நிலையே இருக்கின்றது.
மட்டக்களப்பில் உள்ள சிரேஸ்ட நிர்வாக தரம் வாய்ந்த அதிகாரிகளை அலைக்கழித்து அவர்கள் தொடர்பில் முறையற்ற வகையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளனர்.ஐந்து நிர்வாக சேவை அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பழிவாங்கப்பட்டுள்ளனர்.