தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கட்சியின் முன்னாள் தலைவரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

2008ஆம் ஆண்டு கொழும்பில் அத்துருகிரியவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 09வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை நினைவுகூரப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச்செயலாளர் ”.பிரசாந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் சகோதரரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான குமாரசாமி நளினகாந்தன்,மட்டக்களப்பு முன்னாள் பிரதி முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி செயலாளருமான ஜோர்ஜ் பிள்ளை,வவுணதீவு பிரதேசபையின் முன்னாள் தவிசாளர் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குமாரசாமி நந்தகோபனின் உருவப்படத்துக்கு ஒளியேற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.