பாடசாலை மாணவர்களுக்கான நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)

சர்வதேச நீரிழிவு தினத்தினை  சிறப்பிக்கும் வகையில்  பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்வு இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது.


மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக  லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் ஏற்பாட்டில் சர்வதேச நீரிழிவு தினத்தினை சிறப்பிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு வந்தாறுமூலை பல்கலைக்கழக  லயன்ஸ் தலைவி  கலாநிதி சந்திரா மகேந்திரநாதன் தலைமையில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

நடைபெற்ற மாணவர்களுக்கான  விழிப்புணர்வு  நிகழ்வில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சௌக்கிய விஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கே .டி .சுந்தரேசன்  விரிவுரையாளராக கலந்துகொண்டார்

இதன்போது நீரிழிவு நோயின் தாக்கம் , நோயின் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் .உணவு மாற்றம்  , உடற்பயிற்சி , போன்ற விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் லயன் எல் ஆர் . டேவிட் ,   306  C  மாவட்ட ஆளுநரின் பிரதான இணைப்பாளர் லயன் எ .செல்வேந்திரன் ,பிராந்திய தலைவர் பி  டி  எ .ஜெயகுமார்  மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள்   என பலர் கலந்துகொண்டனர் .