குறுமன்வெளி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை!


மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதான வீதியானது நீண்டகாலமாக புனமைக்கப்படாமையால் இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள்,வாகன சாரதிகள் மற்றும் மண்டூர்-குறுமன்வெளி துறையுடாக பயணிக்கும் மக்களும் பல்வேறு அசௌகரிங்களை அனுபவித்து வருகின்றனர்.

தற்பொழுது பருவகால மழை ஆரம்பித்துள்ளதால் இவ் வீதியானது அடிக்கடி நீரில் முழ்குகின்ற நிலமை காணப்படுகின்றது.எனவே மிகவிரைவில் இவ் வீதியை புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.