உடைந்து விழும் நிலையில் பாலம்.

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்குட்பட்ட நவகிரி நீர்ப்பாசண பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலை ஊடாக நவகிரி நகர் மற்றும் பாலையடிவட்டைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள கந்தக்குடாமடு ஆற்றுக்கு குறுக்காக உள்ள பாலம் முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளது. 

போரினால் முற்றாக பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசங்களில் இவ்வாறான கிராமங்களின் முக்கிய தேவைகள் இன்னமும் நிறைவேற்றபடாமல் உள்ளது. இந்த பாலத்தினை ,ப்பிரதேச விவசாயிகளும் பாலையடிவட்டை பிரதேசங்களுக்கு செல்லுபவர்களும் அதிகமாக பயன்படுத்துகின்ற பாதையாகும். இந்த பாலம் மட்டுமல்ல பாதையும் வெள்ள நீரோடி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விவசாயிகள் ,ந்த பாதையினை அதிகம் பயன்படுத்துகின்றனர். வேளாண்மை விதைப்பு காலங்களிலும், அறுவடை காலங்களிலும் மிகவும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்பாலம் சுமார் 40 வருடங்களுக்கு முற்பட்டது. ,து மக்கள் பாவனைக்கு ஏற்றதாக இல்லை. பலமான மழை பெய்யுமாக ,ருந்தால விழுகின்ற நிலையில் உள்ளது. அச்சத்துடனே இப்பாலத்தால மக்களும், விவசாயிகளும் பயணிக்கின்றனர். 
பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான கிராமங்களுக்கு தேர்தல் திருவிழாக்களுக்கு மட்டுமே செல்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றதும் வாக்களித்த மக்களையும், கொடுக்கப்ட்ட வாக்குறுதிகளையும் மறந்துவிடுகின்ற நிலையே உள்ளது. ,ந்த அதிகஷ்ட பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கால்தடங்கள் பட்டிருக்குமோ என்பது கேள்விக்குறிதான்? 
,து தொடர்பாக நவகிரி நீர்ப்பாசண பொறியியலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது         இப்பாலமானது மிகவும் மோசமான முறையில் சேதமடைந்துள்ளது. இதற்கான மதீப்பீட்டு அறிக்கையினை தயாரித்து நாம் மத்திய அமைச்சுக்கு அனுப்பவுள்ளதாகவும், அடுத்த வருடம் இதனை நிவர்த்தி செய்ய முடியும் எனவும், நாங்கள் நேரடியாக சென்று இப்பிரதேசங்களை பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.