மட்டக்களப்பில் நடைபெற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை

(லியோன்)

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது .  


05ஆம் திகதி பிற்பகல் 02.08   மணியளவில் சுமத்திரா தீவு கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் கரையோர பிரதேசங்களுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்களின் பாதுகாப்பு தொடர்பான முன் ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது .

இலங்கை அரசினால்  விடுக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கையானது 02.30 மணியளவில் தளர்த்தப்பட்டது .

இந்த நடவடிக்கையானது சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வாக நாடளாவிய ரீதியில் கரையோர பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களில் போது பொதுமக்களின் பாதுகாப்புக்கான அறிவுறுத்தல் மற்றும் பாதிப்புக்களை தவிர்க்கும்  நோக்கில்   இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இணைந்து இந்த  நடவடிக்கையினை   மேற்கொண்டது

இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடனான  நிகழ்வாக   நடைபெற்றது  

இந்த முன்னெச்சரிக்கை கோபுரங்கலானது   மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறு,  மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு,  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி,  மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி,  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி,  கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா,  கோரணைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகரை( ஊரியன்கட்டு) ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கோபுரங்களில் ஒலி எழுப்பப பட்டு இந்த ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது


குறித்த நிகழ்வானது  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ்  மற்றும்  உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் தலைமையிலான  உத்தியோகத்தர்கள் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ,முப்படையினர் , அரச திணைக்கள அதிகாரிகள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பலர் இணைந்து  இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது