தொடர்மழையால் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச சபை உடனடி நடவடிக்கை.


(பழுகாமம் நிருபர்)
தொடர்ந்து பெய்துவரும் மழையால் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பபட்ட பல கிராமங்களின் உள்வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடுவதற்கு வடிகான்கள் இன்மையால் அனைத்து மழைநீரும் வீதிகளில் தேங்கி நின்றமையால் மக்கள் போக்குவரத்திற்கு
பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இதனால் மக்களின் வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்தமை தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் ஏ.ஆதித்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றதையிட்டு உடனடியான நீர் வழிந்தோடக்கூடியவாறு வடிகான்கள் தோண்டப்பட்டு மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்தார்.  கொட்டும் மழையையும் பாராது செயற்பட்டார். இச்செயற்பாடுகள் பழுகாமம், கோயிற்போரதீவு போன்ற பிரதேசங்களில் நேற்று (27) இடம்பெற்றது. 
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் பிரதேச சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தகாலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பிரதேச சபை செயலாளர் துரிதமாக செயற்பட்டு  உத்தியோகஸ்தர்கள் மற்றும் மக்களுக்கு சிறந்த சேவைகளையும் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.