தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசலையின் வருடாந்த விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலத்தில் 28.11.2017) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் என்.துரைராஜ்   தலைமையில் ஆரம்பமானது.

இவ் விளையாட்டு விழாவிற்கு கௌரவ விருந்தினராக  இரா.சாணக்கியன் தவிசாளர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு களுவாஞ்சிகுடி.சிறப்பு அதிதிகளாக காமினி இன்பராஜன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.தெ.எ.பற்று , ஆ.உதயகுமார் தேற்றாத்தீவு ம.வி ஆகியோரும் கலந்து கொண்டனர் 

இதன் போது  தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசலையின் மாணவர்களின் அணிநடை உடற்பயிற்சி கண்காட்சி மோலும் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வளங்கப்பட்டது.