சிறைச்சாலை கைதிகளுக்கு தேசிய தொழில் தகமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு தேசிய தொழில் தகமை மூன்றாம் தர சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (05) மட்டக்களப்பில் நடைபெற்றது  .


இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால்  மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு ஆறுமாத மேசன் தொழில் பயிற்சியினை வழங்கி பயிற்சி நெறியினை நிறைவு செய்த 13 கைதிகளுக்கு  தேசிய தொழில் தகமை மூன்றாம் தர சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சிறைச்சாலையில்  பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் கலந்துகொண்டு இந்த சான்றிதழ்களை வழங்கி வைத்தார் .

இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  தொழில் பயிற்சி அதிகார சபையின்  போதனாசிரியர்கள் எம் எம் அசாம் , ஆர் தாஹிர் , மட்டக்களப்பு சிறைச்சாலை  புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க ,  சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான , பி .சுசிதரன் .  எல் . ஜெயசுதாகரன் .  பி. ஜி . டேவிட் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற இந்த தேசிய தொழில் தகமை சான்றிதழ்லானது  கைதிகள் விடுதலையாகி சமூகமயப்படுத்தும் போது இவர்களுக்கான தொழில் வாய்ப்பினை வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ பெற்றுக்கொள்ளும் நோக்காக  கொண்டு  வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது