மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பூர்த்தி

தமிழர்களின் காவலர்கள் எனப்போற்றப்படும் மாவீரர்கள் நினைவு நாளை அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்இதரவை மாவீரர் துயிலும் இல்லம்இமாவடிமுன்மாரி துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

முன்னாள் போராளிகள்இபொதுமக்கள்இபொது அமைப்புகள் ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி தன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள்இஉணர்வாளர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முதன்முறையாக இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடாத்தப்படவுள்ளது.

யுத்ததிற்கு பின்னர் பல தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளை மேற்கொண்டுவந்த நிலையில் உணர்வுபூர்வமாக சிறப்பான முறையில் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.