புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் ஆண்டு நிறைவு திருப்பலி

(லியோன்)


மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள்   
பாடசாலையின்  ஆண்டு  நிறைவினை சிறப்பிக்கும்  விசேட திருப்பலி மறை மாவட்ட ஆயரினார் ஒப்புகொடுக்கப்பட்டது  
.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின்   141 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து விசேட திருப்பலியினை ஒப்புகொடுத்தனர் .

திருப்பலியினை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அன்னை வெரோனிக்காவின்  150 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் தமிழ் , ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கிழக்கு மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா விடை போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆயரினால் சான்றிதழ்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர் .


பாடசாலையின்  ஆண்டு  நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , அருட்சகோதரிகள் , அருட்தந்தையர்கள் கலந்து சிறப்பித்தனர்