(லியோன்)
சர்வதேச சிறுவர்
மற்றும் பெண் பிள்ளைகள் தினமும் முதியோர் வார சிறப்பு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமூக சேவைகள் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும் பெண்
பிள்ளைகள் தினமும் முதியோர் வாரமும் தேன் சிட்டு 5வது சிறப்பு மலர்
வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது
.
இந்நிகழ்வில்
மாணவர்களின் கலை நிகழ்வும் ,தேன் சிட்டு சிறப்பு மலர்
வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில்
மலரின் நயவுரையினை மட்டக்களப்பு கல்வி வலய
அலுவலக உதவிப் பணிப்பாளர் (தமிழ்) யுவராஜன் வழங்கினார் .இதனை தொடர்ந்து
மாணவர்களுக்கு பரிசில்களும் ,பாடசாலை செல்லும்
வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும்
வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்
.மணிவண்ணன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் ஆரம்ப பிரிவு
உதவிப் பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன் , மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் முன்பிள்ளைப்பருவ
அபிவிருத்தி உதவி பணிப்பாளர் எம்
.புவிராஜ், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா
, மண்முனை வடக்கு கிராம சேவை நிர்வாக
உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் மற்றும் மண்முனை
வடக்கு சமுர்த்தி
முகாமையாளர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கலந்துகொண்டனர்