புதிய அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது .
 

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமையேற்றுள்ள எம் .உதயகுமார் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  பழைய  மாணவர் ஆவார் .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க  அதிபராக  பதவி ஏற்றதன் பின் தான் கல்வி பயின்ற கல்லூரிக்கு விஜயத்தை இன்று மேற்கொண்டார் .

இதன் போது புதிய அரசாங்க அதிபரை  கல்லூரி அதிபர்  விமல்ராஜ் தலைமையில் கல்லூரி  ஆசிரியர்கள் ,மாணவர்கள்  ,கல்லூரி பழைய மாணவர்கள் ஆகியோரினால்   வரவேற்பு அளிக்கப்பட்டு  அவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது .


இதனை தொடர்ந்து தனது ஆசானான ஓய்வுநிலை அதிபர் பிரின்ஸ் காசினாதரை சந்தித்து ஆசிவாதம் பெற்றுக்கொண்டார்