கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு

(லியோன்)

பாவனையாளர் பாதுகாப்புக்கான வழிகாட்டி எனும் தலைப்பின் கீழ் நேர்மையான வியாபாரச் சூழலில் பாதுகாக்கப்பட்ட  பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வுகள் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்றது.


இதன் கீழ்  நுகர்வோர்  அலுவல்கள் அதிகார சபை ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  நேர்மையான வியாபாரச் சூழலில் பாதுகாக்கப்பட்ட  பாவனையாளர்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் (23) நடைபெற்றது .

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் ஆலோசகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கணேசமூர்த்தி ஆலோசனைக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி  அற எப் எ . சதாத் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்றது .

இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர்  ஹசித திலகரட்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

செயலமர்வில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள் , பாடசாலை வர்த்தக பாடநெறிக்கான ஆசிரியர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொடண்டனர்