பிரபஞ்சமும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா

(லியோன்)

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெள்ளவூர்க் கோபால் எழுதிய பிரபஞ்சமும் வாழ்வியலும் எனும்  நூல் வெளியீட்டு விழா  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று  நடைபெற்றது . 


மட்டக்களப்பு தமிழ்ச் சங்க தலைவரும் மட்டக்களப்பு இறைவரித் திணைக்கள ஆணையாளரும் சட்டத்தரணியுமான  எம் .கணேசராஜா தலைமையில் நடைபெற்ற பிரபஞ்சமும் வாழ்வியலும் எனும் நூல்  20 வது  நூல் வெளியீட்டு விழா நிகழ்வில்  கிழக்கு பல்கலைக்கழக முன்னால் பீடாதிபதி பேராசிரியர் எம் .செல்வராஜா ,,சிரேஷ்ட சட்டத்தரணி கே .நாராயண பிள்ளை , மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் எம் .செல்வராஜா ஆகியோர் முன்னிலை வகிப்போரக கலந்துகொண்டனர்

முதன்மை விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் எஸ் .ஜெய்சங்கர்  மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை பெறும் அதிதியாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொருளாளர் சைவப் புரவலர் வி ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர் .
நூல் வெளியீட்டு விழாவில் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்துடன் விழா ஆரம்பமானது .

இதனைதொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தட்சாயினி பரமதேவனின் நூல் வெளியீடுட்டுரையுடன் கவிக்கோ வெள்ளவூர்க் கோபால் எழுதிய பிரபஞ்சமும் வாழ்வியலும் எனும்  நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் , கல்வி திணைக்கள அதிகாரிகள் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் ,