ஓந்தாச்சிமடத்தில் வனரோபா நிகழ்வு.


(பழுகாமம் நிருபர்)
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் வனரோபா நிகழ்சி திட்டம் ஓந்தாச்சிமடம் கலைவாணி வித்தியாலயத்தில் கடந்த 09.11.2017ம் திகதி  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கடல்சார் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் (MEPA)
ஆர். ரஜிகரன், கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளர் மு.குகதாசன் , இந்நிகழ்வின் பிரதான அனுசரனையாளர் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன், " வனரோபா நிகழ்ச்சி திட்டம் ஜனாதிபதியின் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அழிந்து போன வனவளத்தை மீண்டும் மீள்வனமாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தின் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெற்றால் மாத்திரமே சூழல் சமநிலையை பேணலாம். அவ்வாறு பேணி பாதுகாத்தால் நாம் இயற்கையின் சீற்றத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாக்கலாம். மனிதர்களாகிய நாமும் காட்டு வளத்தையும், இயற்கையையும் அளவிற்கு மீறி நுகராமல் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் சட்டதிட்டங்களின் பிரகாரம் பயனை பெற்று நாமும் வாழ்ந்து அடுத்த சந்ததிக்கும் வளமான வனத்தையும், இயற்கையையும் விட்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.