முன்பள்ளி மாணவர்களை சிறந்த கல்விமான்களாக மாற்றியமைக்க வேண்டும்


முன்பள்ளி சிறார்களை சிறந்த கல்விமான்களாக்க கூடியவாறான திறன்களை விருத்தி செய்கின்ற களமாக இந்த பாலர் பாடசாலைகள் விளங்குகின்றன என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 51வது நிறைவினை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2017) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் உரையாற்றுகையில் 

சின்னஞ்சிறார்களை சமூகத்திற்கு சிறந்த ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் மாற்ற கூடிய திறன்களை இந்த வயதிலே பாலர் பாடசாலைகளிலே அதற்கான திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களை பெற்றோர்கள் களிமண்களாகவே இந்த பாடசாலையில் சேர்க்கின்றனர். அந்த களிமண்ணை உருவமாக்குவது பாலர்பாடசாலை ஆசிரியர்களிலே தங்கியுள்ளது. பல பாடசாலைகள் வளங்களன்றிய நிலையில் கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இயங்கி வருகின்றது. அவ்வாறான பாடசாலைகளை தொண்டர் நிறுவனங்கள் தங்கள் கவனத்தில் கொண்டு எமது  சிறார்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முன்வர வேண்டும். அதற்காக எமது இராசமாணிக்கம் அமைப்பு தயாராக இருக்கின்றது. ஒருவருடத்திற்கு எமது அமைப்பால் 80 இலட்சம் ரூபா நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாங்கள் பங்காற்றி வருகின்றோம் என தெரிவித்தார்.