கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் தேசிய ,,மாகாண மட்டத்தில்   நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (17) செவ்வாய்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் 2017 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் தேசிய மட்டத்திலும் மாகான மட்டத்திலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி .டி .ஹரிதாஸ் தலைமையில் பாடாசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் , பதக்கங்களும் , சான்றிதழ்களும் அதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்


இந்நிகழ்வில் அதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன் , பாடசாலை ஸ்தாபகர் குடும்ப உறுப்பினரான திருமதி .வி .கோபிகிருஷ்ணா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்