ஏறாவூர் இரட்டைக்கொலை –சந்தேகத்தில் ஐவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறா{ர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் அடித்துக்கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருடன் இணைந்து விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொலை நடைபெற்ற பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுக்கள் மோப்ப நாய்கள் கசிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கொலை நடைபெற்ற வீட்டிற்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று காலை உடைந்த நிலையில் கோடாரி ஒன்றிணையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இரட்டைக்கொலை தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுவருவதாக ஏறா{ர் பொலிஸார் தெரிவித்தனர்.