மட்டக்களப்பில் நடைபெற்ற கேதார கௌரி விரதம்

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வாக இன்று காப்புகட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை நினைத்து இந்த விரததத்தினை அடியார்கள் அனுஸ்டித்துவந்தனர்.
தினமும் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டுவந்த அடியார்கள் இன்று காப்பினைக்கட்டி தமது விரதத்தினை நிறைவுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இம்முறை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கேதார கௌரி விரதத்தினை அனுஸ்டித்தினர்.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார் தலைமையில் விசேட”ஜைகள் நடைபெற்று அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கேதார கௌரிவித்தினை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில் விசேட யாக ”ஜை நடைபெற்றதுடன் அடியார்கள் பால் மற்றும் இளநீர்கொண்டு அபிசேகம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து விசேட ”ஜைகளுடன் அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.