கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் கொள்கை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் மட்டக்களப்பில்.

(சசி துறையூர் ) கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் கொள்கை தயாரிப்பதற்கான முன்னோடி செயலமர்வொன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்று பணிப்பாளர் திரு எஸ். வரதசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் திரு பொன் செல்வநாயகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தீன் ஹமீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள்,  மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், மட்டக்களப்பு மாவட்ட பதிநான்கு பிரதேச செயலக பிரிவுகளினுடைய பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர்கள் இளைஞர் பிரதி நிதிகள் என பலர் இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.


கிழக்கு மாகாண கல்வி கலை கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு இளைஞர் விவகார மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர்கொள்கை தயாரிப்பதற்கான நடவடிக்கை கடந்த வருடத்திலிருந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.