மட்டக்களப்பில் இருவேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவேறு இடங்களில் இருவரின் சடலங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

 மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறொன்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீயில் அமைந்துள்ள பாழடைந்த கிணறிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக நேற்று (06) மாலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸால் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த சடலம் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தினை சேர்ந்த தம்பிமுத்து செல்லத்துரை 65வயது என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று  சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகி;ன்றனர்.

இதேபோன்று மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ள நிலையில் டலமாக மீட்கப்பட்டள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய  அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என்பவரே, இன்று (07) காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்கள், உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரும், அவரது தாயும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில், மேற்படி பெண்ணும் அவரது 5 வயதுடைய பெண் குழந்தையும், பெண்ணின் தந்தையும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள அவர்களது உறவினர்களின் வீட்டுக்கு, நேற்று (06) தந்தை சென்றுள்ள நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கணேசதாஸ் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பொலிஸார் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொண்டதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.