இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இலவச கண்சிகிச்சை முகாம்.

(மண்டூர் நிருபர்)கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் இன்று(07) மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி  சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் மனித வளப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகைசீலன்,மட்டக்களப்பு மூக்குக் கண்ணாடி ஸ்தாபன ஊழியர்கள்,மண்டூர் கோட்டமுனை இந்துசமய மறுமலர்ச்சி மன்றத் தலைவர் த.சௌந்தரராஜன்,கணேசபுரம் கண்ணகி கலா மன்றத் தலைவர் ஜெயரெட்ணம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Add caption